• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அதாண்டா இதாண்டா அர்ஜுன் சம்பத் நான்தாண்டா…!

திராவிடக் கட்சிகளுக்கு தனது பேட்டி மூலமாக டஃப் கொடுத்துவரும் அர்ஜுன் சம்பத் தற்போது திரைப்பட நடிகர்களுக்கு தனது டான்ஸ் மூலம் டஃப் கொடுக்க தொடங்கியுள்ளார்.

திராவிட கட்சிகளையும், அதன் அரசியல் தலைவர்களையும் மீடியாக்களின் மூலம் வசைபாடுவதையே தனது கொள்கையாக வைத்திருப்பவர் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத். பாஜகவின் திட்டங்களைப் பற்றி வானவிற்கு புகழ்ந்து பேசி வம்பில் மாட்டிக்கொண்டதும் பல்டி அடிப்பதில் கில்லாடி. பல செய்தித் தொலைக்காட்சிகளும், யூட்யூப் சேனல்களும் இவரது பேட்டியை ஒளிபரப்பிதான் கல்லா கட்டுகின்றன..இந்த நிலையில் நம்ம அர்ஜூன் சம்பத் சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோவில் அர்ஜூன் சம்பத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஆச்சர்யப்படும் அளவுக்கு அருணாச்சலம் கெட்டப்பில் ஸ்டெப் மூவ்மெண்ட் கொடுத்து ஆடியிருக்கிறார்.ஆர்கேஜி மூவிஸ் சார்பில் கங்காதரன் ஹீரோவாக நடிக்கும் நல்லதே நடக்கும் படத்தில் நம்ம அர்ஜூன் சம்பத்தும் நடித்து வருகிறாராம்.இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்துள்ளது. இந்த படப்பிடிப்பு கலந்து கொண்டு அர்ஜூன் சம்பத் ஆடிய ஆட்டம் தான் தற்போது இணையதளமெங்கும் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசியலில் முதலமைச்சராக இருந்தவர்கள் சினிமாத்துறையில் நடித்த பின்னர் அதன் மூலம் பொதுமக்களின் அன்பை பெற்று முதலமைச்சராகியுள்ளனர். எனவே இந்த பார்முலாவை கருத்தில் கொண்டுதான் அர்ஜுன் சம்பத் திரைப்படத்தில் நடித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அர்ஜுன் சம்பத் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.