மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமையல்காரராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய ராஜம்மாள் காலமானார்.
அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ள்ள ராஜம்மாளின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அதே போல், ஓபிஎஸ்-இன் இரண்டாவது மகன் பிரதீப் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுகளாக ராஜம்மாள் சமையல் செய்து வந்தார். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் போது கூட ராஜம்மாளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜம்மாள் உயிரிழந்துள்ளார்.