
தமிழ் சினிமாவில் ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 2 வருடங்களாக கூறப்பட்டு வந்தது
ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமலே ஆதியும்-நிக்கியும் இருந்தனர். இந்நிலையில் வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதுகுறித்து நடிகை நிக்கி கல்ராணி தனது ட்வீட்டர் பக்கத்தில் நிச்சியத்தார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த ட்வீட்டில் “வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டோம் 24.3.22 எங்களுக்கு சிறப்பான நாள். எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்..இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும்போது உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

