



பயணிகளின் வசதிக்காக ரயில்களிலும் ஏ.டி.எம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக, மத்திய ரயில்வே, மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை அடிப்படையில் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.
மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா இதுபற்றி கூறியிருப்பதாவது..,
“மகாராஷ்டிரா வங்கியின் உதவியோடு முதல் முறையாக ஏடிஎம் மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேர் கார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும்போதே ஏடிஎம் மெஷினை பயன்படுத்தலாம். பாதுகாப்புக்காக ஒரு ஷட்டர் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிமனை தொழிலாளர்கள் இந்த ஆல்ட்ரேஷன் பணியை மேற்கொண்டனர் விரைவில் அனைத்து பயணிகளுக்கும் இதுபோன்ற ரயில் ஏடிஎம் சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பயணிகள் இந்த முயற்சியை பாராட்டி சமூக தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
பஞ்சவதி எக்ஸ்பிரஸ் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மத் சந்திப்பு இடையே தினமும் இயக்கப்படுகிறது.
இது ஒரு முறை பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். மகாராஷ்டிராவிலேயே இந்த ரயில் ரூட் மிகவும் பிரபலமான ரூட்டுகளில் ஒன்றாகும்.
இதேபோன்ற ரயில் ஏ.டி.எம்.கள் மற்ற ரயில்களிலும் குறிப்பாக தமிழகத்தின் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே உருவாகியிருக்கிறது!

