கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் ஏ.டி. கே ஸ்கேன்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு மல்டி ஸ்லைஸ் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டிஜிட்டல் மெமோகிராபி, 3டி, 4 டி சோனோகிராபி, போன் மைனர் டென்சிட்டி, டிஜிட்டல் இசிஜி, எக்கோ, திரெட் மில் டெஸ்ட், பிலுமினேரி பங்க்ஷன் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஏ.டி. கே ஸ்கேன்ஸ், ஆண்டர்சன் ரத்தப் பரிசோதனை மையம் இணைந்து பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை சவுரி பாளையத்தில் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏ டி கே ஸ்கேன்ஸ் திறப்பு விழாவை முன்னிட்டு, 20 சதவீதம் கட்டண சலுகையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏடி கே ஸ்கேன்ஸ் மையம் மூலம் வீடுகளுக்கு வந்து, ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ் வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படுகிறது. மையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு ஏ.டி. கே ஸ்கேன்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.