• Fri. Nov 8th, 2024

நீரில் மூழ்கிய தனியார் பேருந்து, அரசுப் பேருந்து

BySeenu

Oct 14, 2024

கோவையில் கனமழை, நீரில் மூழ்கிய தனியார் பேருந்து தொடர்ந்து, அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. – பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது.

கோவை, சாய்பாபா காலனி ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த பேருந்து வெளியே எடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் பெய்த கன மழையில் இதே பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டிக் கொண்டது குறிப்பிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *