• Thu. May 2nd, 2024

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்..,நவராத்திரி வழிபாடு செய்ய அனுமதி வழங்க கோரி..வீடுகளில் கருப்பு கொடி கட்டி பேராட்டம்..!

ByKalamegam Viswanathan

Oct 14, 2023

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 10 நாள் வழிபாடு செய்ய அனுமதி வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் சிவகாமிபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் சேர்ந்த சாலியர் சமுதாயத்தினர் குலதெய்வமாக கடந்த 400 ஆண்டுகளாக நவராத்திரி முன்னிட்டு பத்து நாட்கள் மழையில் தங்கி முளைப்பாரி போட்டு வழிபட்டு வந்ததாக கூறுகின்றனர். இத்தனை ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த எங்களை மழையில் தங்கி வழிபாடு செய்யக் கூடாது புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டதால் வழிபாடு செய்ய வேலை அனுமதி என கூறி நலத்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவிப்பதால் கடந்த மூன்று நாட்களாக விருதுநகர் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எங்களுக்கு எப்போதும் போல் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இல்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *