• Thu. Jan 15th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்

Byமதி

Dec 7, 2021

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய அஷ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஷ்வின் தென் ஆப்பிரிக்கா வீரர் காலிசுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.