• Wed. Apr 24th, 2024

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் மூர்த்தி அறிக்கை..!

Byவிஷா

Dec 7, 2021

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,


தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்களின் நலனுக்காக குடும்ப நல உதவி. மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதி உதவி. தீ விபத்து உதவி, நலிவுற்றோருக்கான நிதி உதவி. விபத்து கால உதவி. திருமண உதவி என ஒன்பது வகையான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் வாயிலாக 1989ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 3,05,73000ஃ- மதிப்பீட்டில் 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.


வணிகர் நல வாரியத்தை திறம்பட செயல்படும் வகையிலும், சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தபட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றபின் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் வருடத்திற்கு விற்று முதல் அளவு (வுரஅழஎநச) ரூ.40.00.000ஃ- வரையிலான வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத்தொகையான ரூ.500 கட்டணம் செலுத்துவதிலிருந்து 15.07.2021 முதல் மூன்று மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.


இதன்பயனாக 15.07.2021 முதல் 14.10.2021 வரை 40.442 (இணை ஆணையர் மூலமாக 31,898 மற்றும் நேரடி இணைய வழியாக 8.544) வணிகர்கள் தங்களை இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகக இணைத்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.


பல்வேறு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகள் விலக்களிக்கப்பட்ட கால அவகாசத்தை 31.03.2022 வரை நீட்டிக்க அரசுக்கு கோரிக்கை அளித்தன் பயனாக அமைச்சர் மூர்த்தியின் பரிந்துரையின் படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கட்டணமின்றி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 31.03.2022 வரை நீட்டித்து ஆணை வழங்கியுள்ளார்கள்.


இதன்படி விற்று முதல் அளவு (வுரசழெஎநச) ரூ.40,00.000ஃ- வரையுள்ள பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத வணிகர்களுக்கு கட்டணமின்றி உறுப்பினராவதற்கான காலவரம்பு 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *