• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை குறைகிறது

ByA.Tamilselvan

Nov 2, 2022

விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளதால் பொட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ 2 குறைக்கப்படும் என தெரிகிறது.
சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலை ,மற்றும் தேர்தல் நேரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ஐ மத்திய அரசு குறைந்தது. அதன்பிறகு 6 மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.