• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் ‘ஆர்யா 33’

Byமதி

Oct 25, 2021

ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் – ஆர்யா கூட்டணியில் தற்போது உருவாகவுள்ள ‘ஆர்யா 33’ படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது.

ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுத உள்ளார்.