• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

ByT. Vinoth Narayanan

Jan 22, 2025

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் புரோக்கர்கள் ஊடுருவலை தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தத் திட்டம்

பண்டிகை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. பல இடங்களில் புரோக்கர்கள் அதிக அளவில் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதாக புகார்கள் மற்றும் வதந்தி உலவுகிறது. இவர்கள் இணையதளத்திலும் அதிக அளவில் பயணிச்சீட்டு பதிவதாக புகார்கள் உள்ளன. இவற்றின் உண்மைத் தன்மை அறிந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

அதிரடி சோதனை

ரயில் நிலையங்களில் உள்ள பயண சீட்டு பதிவு மையங்கள், ட்ராவல் ஏஜென்சிகள் தனியார் இணையதள மையங்கள் ஆகியவற்றில் ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி தவறான வழியில் அதிக அளவில் பயணச் சீட்டு பதிவு செய்பவர்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இணையதள கண்காணிப்பு

ரயில் நிலையங்களில் சிசிடிவி வாயிலாகவும், நடப்பில் உள்ள நவீன வசதிகளைக் கொண்டு ரயில்வே பயணச்சீட்டு பதிவு இணையதளங்களை கண்காணித்தலும் முக்கிய பணிகளாக நடைபெற்று வருகின்றன. அதேபோல கணினியை பயன்படுத்தி அதிக அளவில் பயணச்சீட்டு பதிவு செய்பவர்களையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஐஆர்சிடிசியுடன் கூட்டணி

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிர்வாகத்துடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படை இணையதளங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு சட்டவிரோத பயண சீட்டு முன்பதிவுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் இணையதள கணக்கை முடக்கியும் வைக்கிறது. ஐ ஆர் சி டி சி யும் தனிநபர் பயணச்சீட்டு பதிவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

தவறான வழியில் பயணம் சீட்டுகள் பதிவு செய்வது சமூக குற்றம் என்ற கண்ணோட்டத்தில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றிய விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், ரயில் நிலைய பொது அறிவிப்பு கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கிறது ரயில்வே பாதுகாப்பு படை

சட்ட நடவடிக்கை

இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 143 -ன் படி அங்கீகாரம் இல்லாமல் பயண சீட்டு விற்பதும், பிரிவு 142(1) -ன் படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர மற்றவர் பயண சீட்டு விற்பனையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. இவற்றை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு கடும் அபராதம் அல்லது சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புரோக்கர்கள் கண்டறிய முடியாத பல்வேறு செயல்கள் மூலம் பயண சீட்டு பதிவு செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோசடிகளை உடனுக்குடன் தடுக்க கருவி கற்றல் முறை பயன்படுத்தப்படுகிறது.

வரும் காலங்களில் மோசடிகளை தடுக்க முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருகிறது.