• Thu. Apr 25th, 2024

கந்து வட்டி கொடுமை -3 பேர் கைது

ByA.Tamilselvan

Jun 14, 2022

மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த கீதா என்பவரிடம் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதன் அடிப்படையில் மதுரை கீரைத்துறை போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்
மதுரை காமராஜர் புரத்தில் வசித்து வருபவர் கீதா இவர் தனது தொழில் விருத்திக்காக 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி உள்ளார்.
இதனையடுத்து வட்டி கொடுத்து வரும் மதுரை வில்லாபுரத்தில் சேர்ந்த சித்திரை அழகு .லட்சுமி ஆகிய இருவரிடமும் ரூபாய் 50,000 பெற்றுள்ளார். 50,000 பெற்றுக்கொண்டு வட்டியுடன் மொத்த பணத்தையும் கட்டி விட்டார் இருப்பினும் கூட லட்சுமி மற்றும் சித்திரை அழகு ஆகிய இருவரும் 50 ஆயிரத்திற்கு உரிய வட்டி நீ தரவில்லை எங்களுக்கு இந்த வட்டி போதாது கூடுதலாக வட்டி தரவேண்டும் என பலமுறை அச்சுறுத்தி வந்துள்ளனர் . நான் ஐம்பதாயிரம் மற்றும் வட்டியி கட்டிவிட்டேன் திருப்பியும் தாங்கள் வட்டி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என கீதா கேட்டுள்ளார்
உடனடியாக மோகன்ராஜ் என்பவரின் துணையோடு கிதாவை தாக்க முற்பட்டுள்ளனர் உடனடியாக அதிர்ந்துபோன கீதா மதுரை கீரைத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் இதனையடுத்து கந்துவட்டி தொழிலில் ஈடுபட்ட லட்சுமி மற்றும் அழகுராஜ் அடி ஆளாக வந்த மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்
கந்துவட்டி என்பது தடைசெய்யப்பட்ட சூழ்நிலையிலும் கூட மதுரை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற வட்டிக்காரர்கள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் .ரன் வட்டி கந்து வட்டி போன்ற பல்வேறு வழிகளில் வட்டிக்கு கொடுத்து ஏழை எளியோரிடம் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்க கூடிய சம்பவமும் நடைபெற்று வருகிறது மதுரை மாநகரை பொருத்தவரையில் ஏராளமான சிறு குறு தொழில்கள் இருந்து வருகிறது இதில் பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளை குறிவைத்து கந்துவட்டி நபர்கள் வட்டிக்கு கொடுத்து பின்பு அவர்கள் வட்டிக்கு வட்டி கொடுக்க கூடிய சூழ் நிலையை உருவாக்குகிறார்கள் உடனடியாக மாநகர காவல் துறையினர் இதுபோன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *