• Fri. Mar 29th, 2024

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவை – ஜெயக்குமார் பேட்டி

ByA.Tamilselvan

Jun 14, 2022

தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையா தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்
ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர். அ.தி.மு.க. தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும். ஒற்றை தலைமைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும். இன்று நடைபெற்றது கருத்துப் பரிமாற்றம் தான். கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *