ஆந்திராவில் தீபாவளி முதல் வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கேஸ் சிலிண்டரை வழங்குவதற்கான நிலையான காலண்டர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார். சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
ஆட்சியில் அமர்ந்த பிறகு தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணிகளில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகை முதல் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் சநதிரபாபு தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த செயல்படுத்துவதற்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 31-ஆம் தேதி முதல் தீபாவளியன்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழப்பம் ஏற்படாமல் இருக்கவும், இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், காஸ் சிலிண்டர் வழங்குவதற்கான நிலையான காலண்டரை அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் தீபாவளி முதல் இலவச சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு
