• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ்க்கு எதிராக வெற்றிபெற்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்றது.
22-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பு பற்றிக்கொண்டது. சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் குவிந்திருக்க போட்டி தொடங்கியதுமே மைதானம் அதிர்ந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையதளத்தில் போட்டியை கண்டுகளித்தனர். ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அபாரமான கோல் அடித்தார். மெஸ்சியின் கோலால் உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியனானது. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. உலகக்கோப்பையை அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்சி பெற்றுக்கொண்டார். அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்வது இது 3-வது முறை ஆகும். இதற்கு முன் 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் கனவு நனவானது. அர்ஜென்டினா வெற்றி, மெஸ்சி கோப்பையை கைப்பற்றியதை உலகம் முழுவதிலும் இருந்த கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர்.