உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும்,
5 முறை சாம்பியனுமான பிரேசில், காலிறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுகட்டுகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.
தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போடுகிறது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.
கேப்டன் லயோனல் மெஸ்சி (5 கோல்), இளம் புயல் ஜூலியன் அல்வாரஸ் (4 கோல்) கூட்டணி தான் அர்ஜென்டினாவின் ஆணிவேராக விளங்குகிறது. அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையை தனது தோளில் சுமக்கும் 35 வயதான மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். அவரது விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்றால் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். பந்தை துரிதமாக கடத்தி செல்வதிலும், லாவகமாக சகாக்களுக்கு தட்டிக்கொடுப்பதிலும் அற்புதமாக செயல்படும் மெஸ்சி, பந்துடன் வலையை நெருங்கினாலும் எல்லாநேரமும் அவரே கோலாக்க முயற்சிப்பதில்லை. எதிராளி தடுத்துவிடுவார் என்று உணர்ந்து விட்டால் கனநேரத்தில் அருகில் உள்ள சக வீரருக்கு பந்தை பாஸ் செய்து விடுகிறார். குரோஷியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதமே அதற்கு உதாரணம். அர்ஜென்டினா நாட்டு கால்பந்தின் அடையாளமாக உள்ள டியாகோ மரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் மெஸ்சி, அதற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிரூபிக்க இதுவே கடைசி சந்தர்ப்பமாகும். 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் மேஜிக் நிகழ்த்துவாரா? என்பது இன்றிரவு தெரிந்து விடும்.
பிரான்ஸ் எப்படி?
ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 1962-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து உலக கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்க வரிந்து கட்டுகிறது. பின்களம், நடுகளம், முன்களம் என்று அனைத்து துறையிலும் தனது பலத்தை நிரூபித்துள்ள பிரான்சுக்கு மின்னல் வேகத்தில் விளையாடுவது கூடுதல் பலமாகும். இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள கிலியன் எம்பாப்பே, 4 கோல் போட்டுள்ள ஒலிவியர் ஜிரூட், 3 கோல் அடிக்க துணை நின்றுள்ள கிரீஸ்மான் மற்றும் பெர்னாண்டஸ், கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக எம்பாப்பே தான் எதிரணியின் பிரதான குறியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிறிய இடைவெளி கிடைத்தாலும் பந்தை அசுர வேகத்தில் வலைக்குள் புகுத்தி விடுவதில் அசாத்திய திறமைசாலி. காலிறுதி மற்றும் அரையிறுதியில் அவர் கோல் அடிக்காவிட்டாலும் கூட முன்களத்தில் அவரை மையப்படுத்தியே பிரான்சின் கள வியூகம் வகுக்கப்படுகிறது. கிரீஸ்மான், ஜிரூட்டும் அவரை போன்று அபாயகரமானவர்களே. பிரான்ஸ் அணியில் சில வீரர்கள் வைரஸ் தொற்றால் உடல்நலக்குறைவுக்கு ஆளான போதிலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை, முழு கவனமும் இறுதிப்போட்டி மீதே இருப்பதாக பயிற்சியாளர் டெசாம்ப்ஸ் தெரிவித்தார்.
எப்படி பார்த்தாலும் எல்லா வகையிலும் அர்ஜென்டினாவுக்கு நிகராக பிரான்ஸ் காணப்படுகிறது. அதனால் வெற்றியை வசப்படுத்துவது யார்? என்பதை கணிப்பது நிச்சயம் கடினம் தான். ரசிகர்களின் இடைவிடாத கரகோஷத்துக்கு மத்தியில் உச்சக்கட்ட நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஆனாலும் யார் முதல் கோலை அடிக்கிறார்களோ, ஆட்டத்தில் அந்த அணியின் கையே ஓங்கி நிற்கும்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]