• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

100 கோடி பேருக்கு தடுப்பூசி : ஒளி வெள்ளத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள்…

Byமதி

Oct 22, 2021

கொரோனா பேரழிவில் இருந்து காக்ககூடிய ஒன்று தடுப்பூசி மட்டுமே என அறிந்த உலக நாடுகள் அனைத்தும் தற்போது தங்கள் நாட்டு மக்களுக்கு எப்படியாவது தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என குறிக்கோளுடன் உள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளது. இந்தியாவின் முயற்சியை உலக சுகாதார நிறுவனம் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், இந்திய நாட்டின் மூவர்ண தேசிய கொடியின் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்க செய்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வக அமைப்பு. செங்கோட்டை, குதுப் மினார், ஹுமாயுனின் கல்லறை, துக்ளகாபாத் கோட்டை, ஹம்பியில் உள்ள ராமப்பா கோவில், பழங்கால லே அரண்மனை; கொல்கத்தாவில் நாணய கட்டிடம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவில்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, தமிழகத்தில் மாமல்லபுரம் ஐந்து ரத கோவில் மாதிரியான புராதன சிறப்புமிக்க கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலித்தன.

இது உலக அளவில் ஒரு முக்கியமான மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. 100 கோடி தடுப்பூசி என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளதால் இதனை செய்துள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.