• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உ.பி அமைச்சர் உபேந்திரா திவாரி பேச்சால் சர்ச்சை…

Byமதி

Oct 22, 2021

‘நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை’ என உத்தரபிரதேச மாநில அமைச்சர் உபேந்திரா திவாரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றி பேசிய உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திரா திவாரி, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும், மக்களுக்குத் தான் பெட்ரோல் தேவைப்படுகிறது. 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்லை என்றும் கூறியுள்ளார்.

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தனிநபர் வருமான அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது’ என தெரிவித்துள்ளார். இவரின் இத்தகைய கருத்து பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது உள்ளது.