விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம், தற்போது அரவிந்த்சாமி, ரெஜினா நடித்துள்ள ‘கள்ளபார்ட்’ படத்தை தயாரித்துள்ளது.
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.கதாநாயகனாக அரவிந்தசாமி நடித்துள்ளார். கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். மேலும் பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு:அரவிந்த் கிருஷ்ணா, இசை:நிவாஸ் K.பிரசன்னா, பாடல்கள்:கங்கை அமரன், சரஸ்வதி மேனன், படம் பற்றி இயக்குநர் P.ராஜபாண்டி பேசும்போது, “இந்தப் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ‘கள்ளபார்ட்’ என்கிற வார்த்தை பொருந்தும். அவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச் அப்படி அமைந்துள்ளது. அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘கள்ளபார்ட்’ என்று பெயர் வைத்துள்ளோம்.ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வுபூர்வமான ஒரு போராட்டம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை. படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமான செலவில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். அந்தக் காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் P.ராஜபாண்டி.
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபாட்..!
