மனம் கொத்தி பறவை ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் ’டாடா’ படத்தில் நடித்து வருகிறார். கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
கவினுடன் அபர்ணா தாஸ்,
ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்,
இந்த நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தலைப்பும் வெளியாகியுள்ளது. ஸ்டைலிஷ் கெட்டப்பில் குழந்தையுடன் கவனம் ஈர்க்கிறார் கவின்.