• Tue. Apr 30th, 2024

🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம்.

🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க வேண்டி இருந்ததாக ராகுல் காந்தி பேச்சு. ED, IT, CBI போன்ற அமைப்புகள் இல்லாமல், பாஜகவால் வெற்றி பெற முடியாது எனவும் விமர்சனம்

🔸 திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி பட்டியல் இன்று இறுதி செய்யப்படுகிறது. திமுக நேரடியாகக் களமிறங்கும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்பு.

🔸 இறுதி கட்டத்தை நெருங்கும் அதிமுக – பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை. பாமக விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக சம்மதம் எனத் தகவல்

🔸 `கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கக் கோரும் வழக்கை, விரைந்து விசாரிக்க நாம் தமிழர் கட்சி சார்பில் மீண்டும் முறையீடு. அவசர வழக்காக ஏற்று, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

🔸 அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு. சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு

🔸 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது பெங்களூரு அணி. பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *