தென்காசி மாவட்டம் சிவகிரி நேற்று அதிகாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதால் காரில் பயணித்த ஆறு பேரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் உயர்தர சிகிச்சைக்காக இராஜபாளையம் மீனாட்சி மெமோரியல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக உடனடியாக உறவினர்களின் ஒப்புதலின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காயம் அடைந்த ஐந்து நபர்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்ஸ் மீனாட்சி மெமோரியல் ஆம்புலன்ஸ் மற்றும் பாரி ஆம்புலன்ஸ் அன்னை ஆம்புலன்ஸ்* மூலம் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவ குழு உதவியுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து இராஜபாளையம் இருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை 102 கிலோமீட்டர் தூரம் சராசரியாக தூரத்தில் கடந்து செல்ல 2 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த தூரத்தை ஒரு மணி நேரம் 8 நிமிடத்தில் கடந்து சென்ற நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் சாமர்த்தியமாக செயல்பட்டு பத்திரமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை ஒப்படைக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.