• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பழைய சோறு குறித்த தொழிலதிபரின் டுவிட்டர் பதிவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!

Byவிஷா

Feb 23, 2023

பிரபல மென்பொருள் நிறுவனமான ஷோகோ-வின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், எரிச்சலுடன் குடல் பிரச்னை என்ற ஐபிஎஸ் நோயால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் நிலையில், அந்நோய்க்கு எளிதான மருந்தாக பழைய சோறு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த நோய் தனக்கு இருந்ததாகவும், பழைய சோறு எனும் மாமருந்தால் நோய் குணமானதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பதிவு பெரிதும் உதவும். எனவே இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பல பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர். தாங்கள் மறந்திருந்த பழைய சோறு பற்றி நினைவூட்டியதற்கு நன்றி என்றும், பழைய சோறு பல வயிறு சம்பந்தமான முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தரும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் வேம்புவின் இந்த ட்விட்டருக்கு தற்போது பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

My daily breakfast for the past year has been fermented “old rice” (பழைய சோறு in Tamil). I religiously adhere to this diet. I suffered from IBS (irritable bowel syndrome) all life and that is now gone. I also suffer a lot less from allergies. Hope this helps some fellow sufferer.