• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாதனை மாணவிக்கு பாராட்டு விழா..,

தேனி மாவட்டம் கம்பம் எம்.டி தனி (16) கம்பம் பொதுப் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர் T. கண்ணன். இவரது மகள் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மாணவி K.தேஜஸ்வினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவும் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த மாணவிக்கு எம்.டி தனி (16) கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர், மாணவியின் பெற்றோர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.