

திருப்பரங்குன்றம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கான மகளிர் உரிமை காப்பு தொகை விண்ணப்ப படிவம் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள அவனியாபுரம் வில்லாபுரம் மீனாட்சி நகர் பெருங்குடி தனக்கன்குளம் திருநகர் பாம்பன் நகர் உள்ளிட்ட நகர்புறப்பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்படிவம்.
ஆதார் கார்டு வங்கி கண்டு ,மின் கட்டண ரசீது ,வீட்டு வரி ரசீது ஆகியவை பெறப்பட்டு மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவத்துடன் ஆதார் சரிபார்க்கப்பட்டு மின்னணு பதிவின் மூலம் பதிவு செய்யப்படடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ரேசன்கடைகளில் 500 கார்டுகளுக்கு ஒருவர் வீதம், ஆயிரம் கார்டுகளுக்கு 3 பேர் என தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்திரவின் பேரில் பணிகள் நடை பெறுகிறது.

