மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மது போதையால் ஏற்படும் விபரீதங்கள், மதுவால் சீரழியும் குடும்பங்களின் நிலை குறித்து நாடகம் மூலம் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;.

அதனைதொடர்ந்து நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியிலிருந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது தொடங்கி வண்ணாரப் பேட்டை, செல்வி மகால் தெரு, கவுன்டன்பட்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்கள் சென்று போதை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியை பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு முன்னிலையில் பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
