• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..,

ByVasanth Siddharthan

Apr 29, 2025

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன்(29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு கிராம நிர்வாக அலுவலரை அனுகியுள்ளார். பட்டா மாறுதல் செய்வதற்காக விவசாயிடம் கிராம நிர்வாக அலுவலர் மூவாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் தர விரும்பாத விவசாய மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பவுடர் தடவிய 2500 ரூபாய் நோட்டுக்களை விவசாயி மகேஸ்வரனிடம் அளித்து கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்சமாக கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பினர்.

இதனையடுத்து இன்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகை தந்த விவசாயி மகேஸ்வரன் கிராம நிர்வாக அலுவலரிடம் 2500 ரூபாயை லஞ்சமாக கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிலுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜக்காரியா என்பவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையின் போது லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.