• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

லஞ்ச ஒழிப்பு துறை இடலாக்குடி, சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை…

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சார்பதிவாளர் ஆண்ட்ரூ என்பவரின் இருசக்கர வாகனத்தில் புரோக்கர்கள் மூலம் இரண்டு கட்டுகளாக கொடுக்கப்பட்ட 60,000 ரூபாய் ரொக்கம் கணினி அறையில் 7,500 ரூபாய் ரொக்கம் மற்றும் சார் பதிவாளருக்கு கொடுக்க கொண்டு வந்த ரூபாய் 42,000 ஆகியவை தற்போது வரை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விடாமுயற்சியாக தொடர்ந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர். சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்காணித்து குமரி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையில் தொடர் கண்காணிப்புகள் நடத்தி அதிரடி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திடீர் திடீர் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டு வருவதால் குமரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இடையே தற்போது ஒரு வித பீதி தொற்றிக் கொண்டுள்ளது. தொடரும் சோதனை முடிவில் தான் கூடுதலாக எவ்வளவு பணம் கைப்பற்றப்படுகிறது என்பதும் யார் யார் மீது வழக்குகள் பதிவாகும் நிலை வரும் என்பதும் தெரியவரும்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் பதிவாளர்கள்.ஒரு சென்ட் நிலத்திற்கு(குறிப்பாக இடங்கள் இருக்கும் பகுதிக்கு என ஒரு பெரும் தொகையை லஞ்சமாக கேட்பதாக ஒரு பரவலான கருத்து ஆரல்வாய்மொழி முதல் மாவட்டம் (மாநில எல்லையான)களியக்காவிளை வரையில் ஒரு பேச்சாக இருக்கிறது.