• Mon. Apr 29th, 2024

ஆரோக்கிய அன்னை அகாடமி (பொத்தையடி) பள்ளியில், ஹான்ட்பால் போட்டியில் மோதிய எட்டு பள்ளிகள்..,

பொத்தையிடி சியோன் கார்டன் நகரில் உள்ள ஆரோக்கிய அன்னை அக்டாமியில் நடைபெற்ற ஹான்ட் பால் போட்டியில். குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆடுகளத்தில் இறங்கினார்கள்.

ஹான்ட் பால் போட்டி 15_வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி துணை காவல்துறை கண்காணிப்பாளர் முதல் போட்டியை, இரண்டு அணி மாணவ குழுக்களிடமும் கை குலுக்கி வாழ்த்தி தொடங்கி வைத்தார்.

எட்டு அணிகள் மோதியதில் இறுதி போட்டியில். குமரி மேல்பாளை புனித மேரிஸ் மேல் நிலைப்பள்ளியும், மணலிக்கரை புனித மரியகொரட்டி பள்ளியும் இறுதி நிறைவு போட்டியில் மோதின. நிறைவு போட்டியை இரண்டு அணிகளுடன் கை குலுக்கி, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஸ் குமார் தொடங்கி வைத்தார்.

இறுதி போட்டியில் தொடக்க முதலே மேல் பாளை புனித மேரிஸ் பள்ளி மாணவர்கள் அவர்களது தனித்த திறமையை வெளிப்படுத்தினார்கள். கிடைத்த பெனாடிக் வாய்ப்பு களை எல்லாம் “கோலாக” மாற்றினார்கள் விளையாட்டின் நிறைவில்.மேல்பாலை புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளி 18 கோல்களை அடித்து அசத்திய வெற்றி பெற்றது.மணலிக்கரை புனித கொரட்டி மேல் நிலைப் பள்ளி 7 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

வெற்றி பெற்ற மேல்பாளை புனித மேரீஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு. ஆரோக்கிய அன்னை அகடாமி தாளாளர் மற்றும் சிறப்பு விருந்தினரான குமரி மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி சதீஸ் குமாரும் இணைந்து வெற்றி கோப்பையை வாழ்த்தி பரிசாக கொடுத்தனர்.

புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவர்களது வெற்றி கோப்பையுடன், விளையாட்டு மைதானத்தில், ஓட்டம் மற்றும் நடையுடன் உற்சாகமாக வலம் வந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *