உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது. 57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் 5-1 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் டேவாசிமெக் எர்கெம்பயரை தோற்கடித்தார், இந்திய ‘இளம் புயல்’ அன்ஷூ மாலிக், அரை இறுதியில் உக்ரைனின் சோலோமியா வின்க்கை 11-0 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிசுற்றை எட்டினார்.

இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 20 வயதான அன்ஷூ மாலிக் படைத்தார். தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அவர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் ஹெலின் மரோலிசுடன் இன்று மல்லுகட்டுகிறார்.