கோவை காட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் கார்த்திகேய பாண்டி. இவர் குடியரசு தின ஒட்டி காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்திய போது மூன்று பேர் இவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் தவ்லா நிஷா தீவிர விசாரணை நடத்தி ஆல்வின் முகமத் ஷாலி ஆகியோரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்றனர். இதில் ஆல்வின் முகமத் ஷாலி ஆகியோர் கால் முறிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் தலைமுறைவான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.





