• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் அபிஷேகம்..,

ByAnandakumar

Jul 2, 2025

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆனி மாத திருமஞ்சனம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியொட்டி புகழ் சோழர் மண்டபத்தில் இன்று நடராஜர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சுவாமி களுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நடராஜர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.