• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 1, 2026

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, வடமட்டம் பகுதியில் அமைந்துள்ள என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.முஜ்பூர் ரஹ்மான் தலைமையிலும் இயக்குனர் டாக்டர் முகமதுஅலி முன்னிலையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் (சிறுநீரகவியல் துறை தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்). கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தார். அவருடன் சிவஸ்ரீ பாலஸர்வேஸ்வர குருக்கள், மறைத்திரு போதகர் பி. சாமுவேல், மௌலவி.ஹாபிழ்.ரஹ்மத்துல்லாஹ் ஜைனி, ஆகியோர் கலந்து கொண்டு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை தத்துவம் குறித்த ஊக்கமளிக்கும் தத்துவங்களை சொற்பொழிவாற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்கான பரிசுகள் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கரங்களால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல் நாடகம் என பல்வேறு திறமைகளை மாணவர்கள் மிக அழகாக வெளிப்படுத்தினார்கள். இதில் ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தி விதமாகவும் விவசாயிகளின் இன்றைய நிலை குறித்த விழிப்புணர்வு செய்கை நாடகங்கள் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்மையை போற்றும் விதமாக நடனம் மூலம் காண்பித்து திறமையை வெளிப்படுத்தினார்கள்.