மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40 வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.,

இந்த விழாவில் சமூக செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்., தொடர்ந்து பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற கலை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.,
தொடர்ந்து மாணவிகள் மத்தியில் பேசிய சமூக செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன்,

பெண்சிசு கொலைகள் அதிகம் நடந்த பகுதி உசிலம்பட்டி என்பதை, ஆசிரியர்கள் மாணவியர்களின் கூட்டு முயற்சி மூலம் முறியடித்து காட்டியுள்ளீர்கள்., இப்போது பெண்சிசு கொலை இல்லை என்பதை மாற்றி இருக்கிறீர்கள்.,

பெற்றோர்கள் என்ன மாதிரி வாழ்ந்து காட்டுகிறார்களோ அதை தான் குழந்தையும் கற்றுக் கொள்கிறார்கள்., செல்போன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்று தரும் பெற்றோர்களாக, எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.,
நமது உறவினராக இருந்தாலும், சாலையில் செல்லும் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தைரியமாக எதிர்கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.,
கிருஸ்துவ பள்ளியான இந்த பள்ளியில் 1200 மாணவிகளில் 2 மாணவிகள் மட்டும் கிருத்துவர்கள் என்பது பெருமையாக உள்ளது, பள்ளியில் மத ரீதியான சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள்-யை வைக்கிறேன்., பள்ளியின் சுவர்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை விழிப்புணர்வாக எழுத வேண்டும் என பேசினார்.,




