• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சுகாதார சீர்கேடு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ByKalamegam Viswanathan

Aug 29, 2026

மதுரை கருப்பாயூரணி பாண்டி கோயிலில் கால்நடைகள், கோழி ஆகியவற்றை கோயில் வளாகத்தில் கட்டப்படுவதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, தமிழகத்தில் கோயில்களில் வேண்டுதலுக்காக, கால்நடைகள், ஆடுகள் , கோழிகள் விடப்படுவது வழக்கமாக உள்ளது. மதுரை பைபாஸ்சில் உள்ள பாண்டி கோயிலுக்கு, பக்தர்கள், வேண்டுதலுக்காக கால்நடைகள், ஆடுகள், கோழிகளை விடும் நிலை உள்ளது.

அவ்வாறு விடும் பிராணிகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர் முன்னிலையில் ஏலம் விடும் முறை நடைமுறையில் உள்ளது.
அப்போது, கால்நடைகள், கோழிகள், ஆடுகளால் கோவில் வளாகம் அசுத்தப்
படுத்தபடாமல், பாதுகாக்கப்படும்.

மதுரை பாண்டி கோயிலில், கோயில் வளாகத்தில் ஆடு, கோழிகளை கட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பக்தர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மதுரை மண்டல இந்துசமய அறநிலைய இணை ஆணையாளர் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.