• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Feb 6, 2026

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது தென்கரை நாகேஸ்வர பட்டர் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜைகள் நடத்தினார்.

தொடர்ந்து அங்காள ஈஸ்வரி கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்கள்மீது புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வீரபத்திர சாமி வீரணசாமி, மாயன் சாமி பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.