தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் அரசு உழியர்களும் ஈடுபட்டுள்ளனர். வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் முகாமில் வேலை செய்ய வேண்டியுள்ளதால் வாரம் முழுவதும் விடுமுறை இன்றி வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே கொரானா தடுப்பூசி முகாமை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்தக்கோரியும், முகாம் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் சிரமங்களை களையக்கோரியும், முகாமை 7 மணி முதல் 5 மணி வரை நடத்தக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 7ஆம் தேதி வியாழன் அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகங்கள் முன்பு நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், விருதுநகர் மாவட்டம் தலைவர் K.லியாகத் அலி மற்றும் மாவட்ட செயலாளர் R.வைரவன் அறிவித்துள்ளனர்