• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்த்க்கு திரையுலகின்‌ உயர்ந்த விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருது அறிவிப்பு!..

Byமதி

Oct 24, 2021

திரைத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருதை மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்து கௌரவப் படுத்தியுள்ளது.

இதைகுறித்து, ரஜினிகாந்த் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள்‌ நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின்‌ அன்பினாலும்‌, ஆதரவினாலும்‌ திரையுலகின்‌ உயர்ந்த விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

இரண்டாவது, என்னுடைய மகள்‌ செளந்தர்யா விசாகன்‌, அவருடைய சொந்த முயற்சியில்‌ மக்களுக்கு மிகவும்‌ பயன்படக்கூடிய ‘HOOTE’ என்‌கிற APP-ஐ உருவாக்‌கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்‌. அதில்‌ மக்கள்‌ தாங்கள்‌ மற்றவர்களுக்கு எழுத்து மூலம்‌ தெரிவிக்க விரும்பும்‌ கருத்துகளையும்‌, விஷயங்களையும்‌, இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும்‌ HOOTE APP மூலமாக பதிவிடலாம்‌. இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என்‌ குரலில்‌ பதிவிட்டு துவங்க உள்ளேன்‌” என்று பதியவிட்டுள்ளார்.