• Fri. Mar 29th, 2024

800 ஆண்டுகள் பழமையான ஹாஜிமார் பள்ளிவாசலில் ஆண்டு விழா கொண்டாட்டம்!

Byகுமார்

Feb 18, 2022

மதுரையில் 800 ஆண்டுகள் பழமையானது காஜிமார் பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசலை ஹாஜி சையத் தாஜூதீன் என்பவர் தொடங்கி வைத்தார். அன்றைய மதுரையை ஆண்ட மன்னர் சுந்தர வர்ம பாண்டியன் சுகவீனம் அடைந்தபோது அவருக்கு பிரார்த்தனை செய்து அவரை குணமடைய செய்தார் ஹாஜி சையத்தாஜுதீன். அவரை பாராட்டி சுந்தரவர்ம பாண்டியன் பள்ளிவாசலில் நிறுவுவதற்கும் தனது கட்டிடத்தையும் வழங்கி அதனை பராமரிப்பதற்கு விரகனூர், ஐராவதநல்லூர், குலமங்கலம் கிராமங்களில் நிலங்களையும் தானமாக வழங்கினார்.

இது குறித்து ஓய்வுபெற்ற விஞ்ஞானி, சையது அப்துல்காதர் இப்ராகிம் கூறுகையில், தென்னிந்தியாவிலேயே இந்த பள்ளிவாசல் தான் முதல் பள்ளிவாசல் அதற்குப் பிறகுதான் மற்ற பள்ளிவாசல்கள் வந்தன. அன்று முதல் இன்று வரை ஹாஜி சையத்தாஜுதீனின் குடும்ப வாரிசுகள் இந்த பள்ளிவாசலை நிறுவி சிறப்பித்து வருகின்றனர். இன்று அவரது நினைவு நாளை ஒட்டி அவரை வழிபட்டு, உற்றார் உறவினர் மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழிபட்டனர். இந்நாளில் அனைவருக்கும் இனிப்பு, உணவு வழங்கி கொண்டாடி வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *