சட்டப் பேரவையில் முதலமைச்சர். ஸ்டாலின் செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நிகழ்வில் நடைபெற்ற 41 அப்பாவி பொதுமக்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள் அதில் சம்பந்தமாக முதலமைச்சர் பேசியதை பார்த்தால் வழக்கம் போல அரசின் மீது தவறு இல்லை என்றும் காவல் துறை மீது தவறு இல்லை என்று பேசி இருக்கிறார்.

அதே வேளையில் கரூரில் காவல் துறை பந்தோபஸ்து கொடுத்தது 606 பேர் அந்த அரசியல் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தார்கள் என்று கூறி இருக்கிறார்.
28 ஆம் தேதி கரூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்பில் இருந்ததாக சொல்லி இருக்கிறார் என்று காவல்துறை பத்திரிக்கை செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார்கள். அதில் சம்பவ இடத்தில் 350 பேர் இருந்ததாக சொல்லி இருக்கிறார். மீதம் 150 பேர் வேறு வேறு இடத்தில் இருந்ததாக சொல்லி இருக்கின்றார்கள்.
வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டதற்கு பிறகு முதலமைச்சர் ஒன்று ஏ.டி.ஜி.பி ஒன்று காவல் துறை செய்தி குறிப்பு ஆகியவை மாறி, மாறி உள்ளதை இதில் இருந்து நிகழ்ச்சி நடந்து அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த பிறகு வழக்கு சி.பி.ஐ க்கு போன பிறகு முன்னுக்குப் , பின் முரணாக இந்த வழக்கு தொடர்பாக சட்டப் பேரவையில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, மட்டுமல்லாமல் தங்கள் மீது தவறு இல்லை என்பதை காட்டுவதற்காக இந்த பொய்களை எல்லாம் கட்ட விழ்த்து விடுவதாக பார்க்கிறோம் என்றவர்,
உச்சநீதிமன்றம் காவல் துறையின் மீது தவறு, அதிகாரிகள் செய்த தவறு என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் சில கருத்துக்கள் பதிவாகி இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் சொல்லி இருக்கின்ற கருத்துக்களை பார்க்கும் பொழுது அரசின் மீது அதிகாரிகள் மீதும், அங்கு உள்ள காவல் துறை மீது எந்த தவறும் இல்லை, என்பது போல பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் முன்பாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
முதலமைச்சர் முன்னுக்குப் , பின் முரணாக பேசுவதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றம் அமைத்து இருக்கின்ற அந்தக் குழுவிற்கு சி.பி.ஐ க்கு முறையாக ஆதரவு கொடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவரை வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் அதிகாலை ஒற்றை முக்கால் மணிக்கு முதல் போஸ்ட்மாடம் செய்யப்பட்டதாகவும், பிற்பகலை ஒரு மணிக்கு 39 ஆவது உடலை பிரத பரிசோதனை செய்து இருக்கிறோம் என்று அரசு சார்பில் கூறி இருக்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் 2 டேபிள் மட்டுமே இருந்ததாகவும், அப்படி இருக்கும் பொழுது அந்த நேரம் ஒத்துப் போகவில்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளதாகவும், அதை மறைப்பதற்கு முதலமைச்சர் 24 மருத்துவர்கள் தலைமையில் உடற்குறைவு நடந்தது என சொல்லி இருக்கிறார்.
முதல் நான்கு முதல் ஐந்து மணிக்குள் எத்தனை ? உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியவர், சென்னையில் இருந்து முதலமைச்சர் அவசர, அவசரமாக வந்தார். உதயநிதி துபாயில் இருந்து வந்து அவசர அவசரமாக சென்றார். முதலமைச்சர் மாலை போட்டு, போட்டோ எடுப்பதற்காக அவசரக் கதியில் போஸ்ட் மாடம் செய்ததாகத் தான் பார்க்கிறோம். இது நிச்சயமாக சி.பி.ஐ விசாரணையில் வெளிவரும் எனவும், சி.பி.ஐ விசாரணையில் வெளியே வரும் என்றார்.
மருத்துவர்கள் பற்றாக்குறை தான் சி.பி.ஐ வந்த பிறகு கால் லாக் எடுப்பார்கள், அதுவரை பொறுத்து இருந்து நிச்சயமாக அரசின் பொய்கள், முதலமைச்சர் ஸ்டாலின் பொய்களும் அன்று வெளியே வரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.
இதில் அரசியல் செய்வது என்பது ஒன்றுமில்லை, உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வியை நாங்கள் கேட்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்து இருக்கிற ஓட்டைகளை நாங்கள் கேட்கிறோம்.
45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒரு உடற்கூறு பரிசோதனை என்பது போகும் கணக்கு சரியாகவில்லை என்று கூறியவர், எந்த காரணத்திற்கும் சி.பி.ஐ விசாரணை என்பது நடைபெற கூடாது என்று தலைகீழாக நின்றதாகவும், இன்று அதன் நடக்கிறது மாற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது எனக் கூறியவர், அதற்காக இவர்களே மறக்கும் சக்திகளாகத் தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
வழக்கறிஞர் மீது திருமாவளவன் கார் மோதிய சம்பவம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர்,

அவர்களுக்கு என்ன வேலை, மிரட்டுவதன் வேலை, திரும்பத் திரும்ப நான் கூறுவது, அண்ணன் திருமா அவர்கள் முதலமைச்சரை சந்திக்கிறார். கார் மீது மோதுவது தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும், அதை மறைத்து ஸ்டாலின் அவர்களை பார்க்கும் பொழுது, இவர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆட்சி நடப்பதாகவும், சாதாரணமாக சாலையில் செல்லுகின்ற நபரை மோதி விட்டு, முறைத்தவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பின்னர் மருத்துவமனையில் நெஞ்சு வலி என்று படுத்து இருந்தார் கேவலப்படுத்துவதாகவும், அதைப்பற்றி கேள்வி எழுப்பிய தன்னையும் மிரட்டுவதாகவும், அதையும் தாண்டி முதல்வரிடம் புகார் அளிப்பேன் என்பீர்கள், செய்தியாளர் சந்திப்பில் எனது பெயரை இழுத்து நான் இதற்குப் பின்னால் இருந்ததாக கூறுகிறார், அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் யார் என்று தெரியாது என்றவர், சாமானிய மனிதனுக்காக குரல் கொடுக்கிறேன் என்னை போல் நீங்களும் குரல் கொடுங்கள் அல்லது திருமாவளவன் இதையெல்லாம் விட்டுவிட்டு நாகரீகமான அரசியலுக்கு வர வேண்டும் இதுபோன்று வெறுப்பு, அரசியல் வன்முறை சாலையில் செல்கின்ற நபர்கள் மீது இடிப்பது கேள்வி எழுப்பினால் அடிப்பது, எந்தவிதமான அரசியல் என கேள்வி எழுப்பினர்.
இவர்கள் தமிழகத்திற்கு என்ன மாற்றம் கொடுக்கப் போகிறார்கள் என்ன மாற்றம் நடக்கும், வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம் அதனால் அதை கண்டு பயப்பட போவது நாங்கள் கிடையாது எனவும், அண்ணாமலையை பொருத்தவரை ஒரு அடி கொடுத்தால் இரண்டு அடி கொடுக்கிற ஆள் நான். மற்றவர்கள் போல் வாங்கிக் கொண்டு போகின்றாள் கிடையாது. அதனால் அதற்கும் தயார் தான் வரவேண்டும் என்றால் வாருங்கள் என்றும், இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். இதையெல்லாம் பார்த்து காவல்துறையாக இருந்து அரசியலுக்கு வந்ததாகவும், பல ரவுடிகளை டீல் செய்துள்ளேன் இந்த வேலையெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்தார்.
அதே நேரத்தில் முதல்வர் நான் கூறுவது உள்ளே புகுந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை ஏன் கைது செய்யவில்லை மிகத் தெளிவாக சாலையில் வன்முறை நடந்துள்ளது. உங்களுடைய கூட்டணி கட்சியை சார்ந்த எம்.பி காரில் உள்ளதாகவும், அவர் சுற்றி அத்தனை பேர் உள்ளதாகவும், முதலமைச்சர் அவர்கள் சாமானிய மனிதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், காவல் துறையினருடைய அமைச்சராக இருக்கக் கூடிய மு க ஸ்டாலின் அவர்கள் அந்தப் பதவியை உட்கார வேண்டுமா ? முதலமைச்சர் என்ற நாற்காலி எதற்கு வேண்டும் ? சாமானிய மனிதனின் பாதுகாப்பு வேண்டியதில்லை கூட்டணி கட்சியின் அண்ணன் திருமாவளவன் தான் முக்கியம் என்று முதல்வரும் முடிவெடுத்து உள்ளார், அந்த காலம் போன்று இன்று தொலைக்காட்சி இல்லை, பல்வேறு விதமாக வீடியோக்கள் எடுப்பதாகவும், சாமானிய மனிதனுக்கு தெரிந்துவிடும் யார் ஏமாற்றுகிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள் என்று அதனால் முதல்வர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, காவல்துறையினரின் மானத்தையும், அரசினுடைய மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
த.வெ.க தலைவர் விஜயை முதல் குற்றவாளியாக கருத முடியாது. ஜாமீன் என்பது எல்லோருக்கும் கிடைத்தாகத் தான் போகிறது. தவறு நடந்து இருந்தால் சி.பி.ஐ வந்து விசாரிச்சிட்டு போடுவார்கள் வேகமாக ஜாமீன் கிடைத்து இருக்கிறது என்றால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை கொடுக்க முடியவில்லை என்பது தான். அரசிடம் ஆதாரம் இல்லை என்பது உண்மை. இதனை பெரிது படுத்துவதை விட இந்த நிகழ்வுக்கு பின்னால் யார் ? இருந்தார்கள் என்பது முக்கியம் அது சி.பி.ஐ விசாரணைக்கு பின்னால் வெளிவரும் என்றவர், கரூரில் 41 பேர் இறந்த பிறகும் ஒரு அரசு அதிகாரிகள் கூட பொறுப்பு இல்லை என்றால் அதை எப்படி ? ஏற்றுக் கொள்வது.
இது எந்த மாநிலத்தில் நடந்து இருந்தாலும் முதலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பார்கள் ஏன் ? முதலமைச்சர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் எனக்கு கேள்வி எழுப்பியவர்,
மணிப்பூரில் கலவரம் நடந்த பொழுது மணிப்பூருக்கு வெளியே இருந்த காவல் துறை அதிகாரிகளை எஸ் ஐ டி யை மத்திய அரசு போட்டார்கள். அதே வேளையில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ க்கு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் பிறக்காத இரண்டு அதிகாரிகளை போட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பல மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் விசாரணைக் குழுவில் உள்ளூர் அதிகாரிகளை போடவில்லை.
சபாநாயகரை பொறுத்த வரை அவரது செயல்பாடு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு தி.மு.க தொண்டனை விட சிறப்பாக உள்ளது. முழுதாக 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்றார்.
ஒரு தொண்டன் கூட தி.மு.க வை எந்த அளவுக்கு காக்கவில்லை சபாநாயகர் முழுவதுமாக காப்பாற்றி இருக்கிறார். சபாநாயகர் பணியை ஒரு நாளும் செய்யவில்லை, இத்தனை நாள் அவர் செய்தது தி.மு.க தொண்டனின் வேலை தான் எனவும், பா.ஜ.க., எம்.எல்.ஏ க்கள் நான்கு பேரையும் பல இடங்களில் சபாநாயகர் அவமதித்து உள்ளார். இது கடந்த நான்கரை ஆண்டுகளில் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
அ.தி.மு.க உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்ததையும் கேவலமாக சித்தரித்து இருக்கிறார். தினசரி இதுபோன்று கேவலமாக பேசினால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் ? மக்கள் மன்றத்தில் மட்டும் தான் இதற்கு தீர்ப்பு சபாநாயகர் மோசமாக நடந்து இருப்பதால் எஸ் ஐ டி யை வைக்க முடியும் மக்கள் மன்றத்தில் சரியான தீர்ப்பு எழுதுவார்கள் எனக் கூறினார்.
நேற்றைய தினம் முதலமைச்சர் சிறப்ப ஆலோசனை இந்திக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர ஆலோசனை என்று செய்தி வந்தது.
இதை சட்டமன்றத்தில் பேச வைத்து கரூர் விஷயத்தை பேசக் கூடாது என்று மடைமாற்றம் செயல் ஈடுபட செய்து இருக்கிறார்கள். மறைப்பதற்கு பல விஷயங்கள் பேசி இருக்கிறார்கள். முதலமைச்சர் சரியான தரவுகளை கூற வேண்டும், முதலமைச்சரை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகின்றனரா ? என்றவர், விஜய் மட்டுமின்றி அவரது இடத்தில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர் யாராக ? இருந்தாலும் நான் இதைத் தான் பேசி இருப்பேன் அந்த தலைவர் முதல் குற்றவாளியாக கருத முடியாது என கூறினார்.
முதலமைச்சர் ஆங்கிலம் தெரியாது பாக்ஸ் கான் காரனுக்கு தமிழ் தெரியாது. அறைக்குள் அமர்ந்து என்ன ? பேசினார்கள் என்பதை யாருக்கும் தெரியாது ? அதை டி.ஆர்.பி.ராஜா ஒரு புகைப்படத்தை போட்டு 15 ஆயிரம் கோடி முதலீடு, 15 ஆயிரம் பேருக்கு வேலை என்று ஒரு அடி அடித்து விட்டார்கள். பாக்ஸ் கான் நிறுவனத்தினர் பொய் சொல்லி போக முடியாது. ஓராண்டுக்கு முன்பு முடிவு செய்தோம் அதன்படி தான் சிவம் என்கிறார்.

பாஸ் கான் உண்மை பேசினால் தமிழக அரசுக்கு பிரச்சினை. எனவே தமிழகத்தில் டீக்கடை ஆரம்பித்தால் கூட திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். ஆந்திராவில் 15 பில்லியன் டாலர், விசாகப்பட்டினத்தில் கோகுல் கொண்டு வந்து சத்தமே இல்லாமல் கொண்டு வந்து விட்டார் ஆனால் தமிழகத்தில் டி.ஆர்.பி ராஜா நன்றாக முதலமைச்சரை ஏமாற்றுகிறார் ? தேவையில்லாமல், ஆடம்பரம் ஆக விளம்பரப்படுத்தி திராவிட மாடல், திராவிட மாடல் என சத்தம் போட்டு மாட்டிக் கொண்டார்கள்.
முதலமைச்சரும் டி.ஆர்.பி.ராஜாவும் பேச்சை குறைத்து செயலில் அதிகம் ஈடுபட வேண்டும்.
விமானத்தில் கடந்த முறை சென்ற பொழுது முதலமைச்சராக வந்து இருந்தார். அவருக்கு வணக்கம் கூறி சென்றேன், வேறு எதுவும் பேசவில்லை, அதேபோன்று முன்னாள் அமைச்சர் அண்ணன் செங்கோட்டையன் இன்று விமானத்தில் வரும் பொழுது என்னுடன் வந்தார். அவர் விமானம் ஏறியுடன் உறங்கி விட்டார். நான் புத்தகம் படித்து வந்தேன் அவ்வளவு தான் வேறு எதுவும் பேசவில்லை எனவும் கூறினார்.