• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்த அண்ணாமலை

ByA.Tamilselvan

Jul 15, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலன் குறித்து உதயநிதியிடம் விசாரித்த பாஜக தலைவர் அண்ணாலை.
முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார்.
அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்.
அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும், துக்க நிகழ்ச்சியில் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.