• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை

ByA.Tamilselvan

Aug 10, 2022

செஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
இதில், 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக, 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.இதில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதல் அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் வாழ்த்துகள்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.