• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!

Byகாயத்ரி

Aug 10, 2022

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் . அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ் தாய் வாழ்த்து பாடினார். அவர் தனது மழலை மொழியில் தமிழ் தாய் வாழ்த்து பாடியது அங்குள்ள பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.