• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் அண்ணாமலை நற்பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பில் தமிழ்நாடு அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தென்காசி சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் இளைஞர்கள் பெரியோர்கள் படித்தவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு என்று நற்பெயர் உள்ளது. அவர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்க வேண்டும் தனி கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு மக்களின் நலனுக்காக போராட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக வருகின்ற 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ள மடவார் வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து அன்னதான வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல் மாவட்ட அமைப்புச் செயலாளர் செங்கல்வராயன் மாவட்ட மகளிர் அணி தலைவி உமாராணி மாவட்ட அமைப்புச் செயலாளர் பேராசிரியர் அழகர்
கௌரவ ஆலோசகர் முன்னாள் வட்டாட்சியர் ஆதிநாராயணன் இளைஞரணி மற்றும் தலைவர் சரவணன் கார்த்திக் கலந்து ஆகியோர் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் இருந்து ஏராளமான அண்ணாமலை நற்பணி மன்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.