• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை.. விரைவில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு..?

ByA.Tamilselvan

Jul 4, 2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் மத்தியஅமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், “இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். அந்த வகையில், தென்னிந்தியா தான் பாஜகவின் அடுத்த கட்ட இலக்கு. குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும்” என அவர் கூறினார்.இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அமித்ஷாவுக்கு மிகவும் பிடித்துள்ளதால், எல்.முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்க தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம் அமித்ஷா.