• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்.. வைரலாகும் வீடியோ..

Byகாயத்ரி

Jul 4, 2022

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா பதவி வகித்து வருகிறார். இவர் நகரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்துவ முறைபடி நடைபெற்ற இந்த திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தது. இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த திருமணம் பழங்குடியின மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறுகையில், “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என்றார்.

இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த எலியா எடித் அகுய்லர் கூறுகையில், “இந்த சடங்கு நிறைய மகிழ்ச்சியை தருகிறது. எனது பழங்குடி இனத்தைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு அழகான சடங்கு” என்றார்.