• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சிவனுக்கு அன்னாபிஷேகம்..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் சிவ பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை அடுத்து, அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போல, மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் ,ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு, ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.