• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் நாளை அண்ணா நினைவுதின அமைதி ஊர்வலம்..!

Byவிஷா

Feb 2, 2023

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாளான நாளை (பிப்.3, வெள்ளிக்கிழமை) சேலத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
இந்த ஊர்வலம் காலை 8. 30 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை யில் இருந்து புறப்பட்டு வள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக பேரறிஞர் அண்ணா சிலையை சென்றடைகிறது. அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.