கேரளாவைச் சேர்ந்தவரும், தென்னிந்தியாவில் இளம் நடிகையாக வலம் வருபவருமான நடிகை அஞ்சலி நாயர், தனது க்யூட் லுக்கால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார், இவர் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘டாணாக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் ‘எண்ணித்துணிக’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவர், சினிமாவில் வாய்ப்புகளை குவிக்க உச்சகக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.